மார்கழிக் குளிரே..
என் மார்கிழித்த மலரே..
மறுத்தா விடுவாய்
என் காதலை..
குறைத்தா விடுவாய்
என் ஆயுளை..
கணந்தோறும்
என் மனம்
கனமாகக் காரணம் - உன்
விழியெனும்
விசம் தூவும் சாதனம்
அந்த விசயத்தை
சொல்கிறேன் - நான்
உன்னிடம்..
என் மூளையென்னும்
ஆலைக்குள்ளே
மூன்று நாட்களாய்
வேலை நிறுத்தம்
முகிழ்ந்த காதலை
மொழியலாமென்றால்
முதிர்ந்த நினைவுகள்
மூச்சை மிரட்டும்..
எந்த வார்த்தை
சொன்னால் - உன்னெஞ்சில்
பூ பூக்கும்..
எந்த நாளில்
வந்தால் - உன் பூவில்
தேன் கிடைக்கும்..
அந்த தேவரகசியம்
தெரிந்தால் போதும்
தெய்வ தரிசனம்
வேண்டாம்..
என் தேவியுன் கரம்
பிடிப்பேனென்றால்
மீதிப் பிறவியும்
வேண்டாம்..
- அரவிந்த் குமார்.பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக