சனி, 24 ஜூலை, 2010

இழப்பு

உன்னுருவம் பார்த்தா
வந்ததென் காதல்..
இல்லையெந்தன்
கண்மணியே..

உன் பருவம் பார்த்தா
படர்ந்ததென் நேசம்
உண்மையைச் சொல்
என் உள்ளுயிரே..

மெதுவாய் மெதுவாய்
நிறைத்தாய் மனதை..
பின்னால்தானே
உரைத்தேன் கனவை..

உயிராய் உறவாய்
உணர்ந்தேன் உன்னை..
அதனால்தானே
தந்தேன் என்னை..

நட்பில் தொடங்கிய
நம் பந்தம்
காதலானதெப்போது..
எதுவும் எனக்குத்
தெரியாது..

அறிவியல்வாதிகள்
சொல்கின்ற
எதிர் பாலினர்
உணர்கின்ற
வேதியல் மாற்றமும்
கிடையாது..

நீதான்
எனக்குச் சரியென
நினைத்தேன்..
நினைத்ததை
நிகழ்த்த வழிகளை
வகுத்தேன்..

நண்பர்கள் துணை
வேண்டாமென்று
எடுத்தேன்
கவியெழுத
பேனாவொன்று..

நகர்ந்தன நாட்கள்
நரகத்தைப் போல
கனிந்தது காலம்
என் காதலைப் போல..

காதல் உரைத்தேன்
நான் தான் முதலில்
கண்ணியமாய்
மறுத்தாய்
உந்தன் பதிலில்..

அய்யோ அவசரம்
கொண்டேன் என்று
அழுதேன் நானும்
தனியறை சென்று..

நண்பர்கள் கேட்க
நலம்தான் என்று
சொன்னேன் - நா கூசாத
பொயொன்று..

எங்கே எதிலே
தவறிழைத்தேன்
விடுமுறை நாளில்
யோசித்தேன்..

சுத்தமான
என் அன்பில்
குற்றமேதும்
கண்டாளோ..

தோழியரின்
அறிவுரையில்
குழம்பிப்
போய் விட்டாளோ..

குழுங்கிக் குழுங்கி
அழுதேன்
குணக் குன்றே
நம் காதல்
கூடாதது கண்டு..

சிரிப்பு முகமூடி
அணிந்தேன்
சிவந்த கண்களை
மறைத்துக் கொள்ள..

குறிப்பு கண்டு
நொந்தேன்
கொலைக் குற்றம்
செய்தது போல..

என் பால் நெஞ்சம்
புரியாத பாவியவள்..
என் நூல் நெஞ்சை
அறுத்த ஆணியவள்..

என்னை இழந்ததால்
இழப்பு அவளுக்கு..
மழை தள்ளிப் போனால்
இழப்பு மண்ணுக்கு..

- அரவிந்த குமார்.பா

1 கருத்து: