என் எண்ணக் கடலலையில்
மிதந்து வரும் வண்ணக் கிளிஞ்சல்களை
உன் சின்னப் பாதங்களில்
சமர்ப்பிக்கிறேன்..
இன்னும் எழவில்லை
என் இருதயத்தில்
எங்கே உயிர் நாதம்..
உன் பாதக் கொலுசுகளைப்
பாடவிடு கொஞ்சம்..
மின்னல் கீற்றுகளை
சேகரித்து
சேலை நெய்தவளே..
நீ ஜன்னல் மூடியதும்
செத்துவிடும் நெஞ்சம்..
மண்ணைத் தொடவந்த
மழைத்துளிகள்
மரித்துப்போவதில்லை..
உன்னையும் தொடுவேன் - நான்
அது போல ஒரு நாள்..
தண்ணீர் குளிருமென்றால்..
செந்தனல் கொதிக்குமென்றால்..
நீயும் எனதன்றோ மறுக்க-
வொண்ணுமோ உன்னால்...
வெண்ணிலா புகுவதே
விளையாட்டு எனக்கு..
உன்னெஞ்சம் புகுவதா
புரியாத கணக்கு..
- அரவிந்த் குமார்.பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக