கானக் குருவிகளே..
காடக் குஞ்சுகளே..
வானந் தொறந்து வரும்
ஈரத் தூரல்களே..
கண்ணுல நிர் வழிய
நாம்படும் கஸ்டங்கள
கருத்தோட கொஞ்சம்
காதத் தொறந்து கேளுங்களேன்..
நானாப் போன வழி
தானா வந்தவதான்..
மானா மயிலிறகா
யோசிக்க வச்சவதான்..
வேணான்னு சொன்னாலும்
வெளங்காம நின்னவதான்..
வீணால்ல ஏம்மனச
வத்தி கிழிச்சு எரிச்சுப்புட்டா..
தேனாப் பொழிஞ்சான்னு
தெரியாம நம்பிப்புட்டேன்..
போனாப் போகுதுன்னு
பொசக் கழுதைய ஏத்துக்கிட்டேன்..
தூணா இருந்தவன
துரும்பால்ல ஆக்கிப்புட்டா..
வீரனா இருந்தவன
வெறும் பயலா மாத்திப்புட்டா..
வெள்ளம் வந்த ஊரப் போல
சீரழிச்சுப் போயிட்டாளே..
கொல்ல வந்த அம்பப் போல
மாரக் கிழிச்சுப் போயிட்டாளே..
நெலாவுல நடக்கிறதா
கனாவுல மெதந்தாலும்..
வெலாவுல ஓன்னெனப்பு
வின்னுன்னு குத்துதடி..
ரத்தத்துல கலந்துப்புட்ட
மொத்தத்துல நீ இப்ப..
ரோசங்கெட்ட மனசுக்குள்ள
சட்டமா நீ நிக்கெ..
என்னமோ என்ன நீ
ஏமாத்திப் போனாலும்
கொடங்கொடமா அனுபவத்த
ஏந்தலையிலதான் கொட்டிப்புட்ட..
என்னதான் அனுபவத்த
கொடுத்தாலும் போ புள்ள..
ஒன்னயே நம்புன
ஏம்மனசயில்ல வெட்டிப்புட்ட..
வருசம் ரெண்டு கழிஞ்சு
ஓம்மொகத்த நாம்பாத்தேன்..
நா ரசிச்சு காதலிச்ச
அந்த மொகம் காணமடி..
ஓன்னாச மொகத்த
மறுபடி நாம்பாக்க
இன்னோரு திருவிழா
என்னைக்கு விடியுமடி..
- அரவிந்த் குமார்.பா
நெலாவுல நடக்கிறதா
பதிலளிநீக்குகனாவுல மெதந்தாலும்..
வெலாவுல ஓன்னெனப்பு
வின்னுன்னு குத்துதடி..
என்னதான் அனுபவத்த
கொடுத்தாலும் போ புள்ள..
ஒன்னயே நம்புன
ஏம்மனசயில்ல வெட்டிப்புட்ட..
சில ஞாபகங்கள் கிளர்ந்தெழுகிறது. காலங்கடந்த கவிதையாய் மனதைப் பிழிகிறது.
மாரக் கிழிச்சவள நெனச்சுப் பார்த்தாலே
கண்கள் பூராவும் நீராப் பூக்கிறது.