வியாழன், 15 ஜூலை, 2010

ஊடல் ..




உயிரே நீயென உணருகிறேன்
உன் நினைவால் இதயம் சிதறுகிறேன் ..

உன் காதல் கொண்டாடி தீர்த்தவன்
உன் ஊடலால் கண்ணீரைத் தீர்க்கிறேன்..

உன் பனிச் சிரிப்பில் உணர்வு கரைந்தவன்
உன் துளிக் கோபத்தில் உடைகிறேன் உடைகிறேன்..

வானமானவளே..
உன் இரவுச் சோலையிலே
ஒற்றை விண்மீனாய்
நீந்த வேண்டுகிறேன்..

சேனைத் திரட்டி வந்து
உன் ஞாபகம் விழிகளில் இறங்கியது..
ஆணை பிறப்பிக்கிறேன்
என் ஐம்புலனும் அசைய மறுக்கிறது..

யானைப் படை மூலம்
உன்னை வீழ்த்த வழி வகுத்தேன்..
மானைக் கொல்லோம் என - அவை
என் ஊனைச் சிதைக்குதடி..

இனியவளே எனைத் தனியனாய் ஆக்கிவிட்டாய்..
இதயத்தில் புகுந்து உனதென்று மாற்றி விட்டாய்..

சோகம் எதுவுமில்லை
என் சொந்தமனவளே..
உன்னைத் தவிர
நான் யாரிடம் தோற்கப்போகிறேன்..

- அரவிந்த் குமார்.பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக