உந்தன் காதல் கொள்வதற்கா - நான் காலம் இத்தனை காத்திருந்தேன்..
உன்னிடத்தில் தொலைப்பதற்க்கா என்னிதயம் - குலையாமல் கட்டி வைத்தேன்..
உன் சிரிப்போடு கொஞ்சம் சுடர் - விழியோடு கொஞ்சம் தனித் - தமிழோடு கொஞ்சம் தனை இழந்தது நெஞ்சம்..
உன் வாசலைக் கடந்து நடக்கிற போது கால்களுக்குப் பதில் சிறகுணர்ந்தேன்..
என் கோசலை யுன் முகம் காணா நாளை என் வாழ்க்கைப் பதிவில் விலக்கி வைத்தேன்..
கதிரொளியே காணாத நிலமது போலிருக்கும்..
முழுமதியாம் உனது முகம் காணாத நாள் முழுமைக்கும்..
இரத்தினமாம் என் காதல் சத்தியமாய் ஜெயித்திருக்கும்..
நித்திலமுன் கன்னத்தில் முத்தமிடும் நாள் கிடைக்கும்..
- அரவிந்த் குமார்.பா
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக