பார்க்குமிடம் அத்தனையும் பாவை யுந்தன் பிம்பம் தோன்றுதடி..
பாட்டன் - பாரதி யெழுதிய பாட்டுக்க ளெல்லாம் - உன்னைப் பார்த்த பின்தான் புரிந்ததடி..
ஒரு மொழி இரு விழியால் என் உயிர் குடித்தாய்.. உலகத்தில் தனியனைப் போலெனை உணர வைத்தாய்..
நம் நெருக்கத்தை அதிகரித்தாய்.. தினம் உறக்கத்தில் உலற வைத்தாய்..
தேகமெங்கும் உதிர மென உன்னினைப்பே ஓடுதடி..
காலைப் பனி போல் - என்னை காதல் பனி மூடுதடி..
கோவிலுக்குள் ளிருந்தாலும் - உன் கோல முக ஞாபகமே..
சாமி தனை மறந்து விட்டு - என் ஆறறிவும் சாயுதடி..
சாலையோரப் பெண்களை ஓரக் கண்ணால் கூடக் பார்ப்பதில்லை..
பொழுது சாய்ந்த வேலைகளில் நண்பர் களோடு சுற்ற வில்லை..
இருக்கும் ஒரே தீப் பழக்கம் இரவு தாமதமாய் உறக்கம்..
அதற்கும் காரணமாய் கனியமுதே - உன் கவன்வில் கண்களே இருக்கும்..
- அரவிந்த் குமார்.பா
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக