வியாழன், 5 ஆகஸ்ட், 2010

எப்படி ஈர்த்தாய் என்னை..

உன்னை
எனக்குப்
பிடிக்கவில்லை..

உன் பெயரையும்
நான்
இரசிக்கவில்லை..

உன் தோற்றத்தில்
நான்
தோற்கவில்லை..

நீ
கூட்டத்தில்
தனித்து இல்லை..

பதறும ளவில்
உன்
பருவம் இல்லை..

உருகும் வகையில்
உன்
உருவம் இல்லை..

நளினம் எதுவும்
உன்
நடையில் இல்லை..

ஒழுங்கு சிறிதும்
உன்
உடையில் இல்லை..

சிறு
பனி சிந்தும்
பார்வை இல்லை..

ஒரு
தேன் சிந்தும்
வார்த்தை இல்லை..

மொத்தத்தில்
உன் பெண்மையில்
எதுவும் - என்னை
வெகுவாய்க்
கவரவில்லை..

நீ
வேறோர் ஆணை
ஈர்ப்பாய் என்றும்
உறுதியாய்ச்
சொல்வதற்க் கில்லை..

இப்படி
இத்தனை இல்லைகளின்
இல்லாள் நீ
எப்படி
வசீகரித்தாய்
என்னை
.
.
.
.
.
.
விட
அழகான
எனதுயிர் நண்பனை..

அது மட்டும்
எனக்கும் விளங்கவேயில்லை..

- அரவிந்த் குமார்.பா

5 கருத்துகள்:

  1. //என்னை
    .
    .
    .
    .
    .
    .
    விட
    அழகான
    எனதுயிர் நண்பனை.//
    அருமையான முடிவு! ஏன் எழுதுவதில்லை?

    பதிலளிநீக்கு
  2. நல்லா கவிதை எழுத வரதே. நிறையா எழுதுங்கோ.

    பதிலளிநீக்கு
  3. சென்னைப்பித்தன் அவர்களுக்கும், லெக்ஷ்மி அம்மா அவர்களுக்கும் மிக்க நன்றி..!!

    சென்னைப்பித்தன் அவர்களுக்கு மிக மிகத் தாமதமான நன்றிகள்..!!
    (சிந்திக்க.. மனத்தில் பதிக்க நேரம் வாய்த்தாலும் தளத்தில் பதிக்க வாய்க்கவில்லை..)

    பதிலளிநீக்கு
  4. அந்த இடைவெளியில் மாறியது கதை...

    பதிலளிநீக்கு
  5. நிறைய திருப்பங்கள்-டிவிச்ட்ஸ்களுடன் கவிதை அருமையாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு